அரசு ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் 14ம் தேதிக்குள் கிடைக்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பண்டிகைக்கான முன் தயாரிப்புகளுக்கு உதவுவதற்காக, முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 17 ஆம் தேதியை ஏப்ரல் 14 வரை தேதியாக மாற்ற முடிவு செய்ததாக பிரதமர் மேலும் கூறினார்.
2023 ஐடில்பித்ரி சிறப்பு நிதி உதவியும் இதில் அடங்கும் என்று, இன்று (ஏப்ரல் 10) மேரு ராயாவில் உள்ள பேங்க் சிம்பனான் நேஷனல் கிளைக்குச் சென்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்றவர்களுக்கான 2023 ஐடில்பித்ரி சிறப்பு நிதி உதவியை ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 வரை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக, பொது சேவைத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமட் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















