வியட்நாமில் இருந்து வந்த பதப்படுத்தப்பட்ட எலிகளை பினாங்கு MAQIS கைப்பற்றியது

ஜார்ஜ் டவுன்: மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையின் (MAQIS) பினாங்குக் கிளை நேற்று பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வழியாக 10 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட எலிகளை நாட்டுக்குள் கடத்தும் முயற்சியை முறியடித்தது.

பினாங்கு MAQIS இயக்குனர் முஹம்மது இக்ராம் அப்துல் தாலிப் கூறுகையில், சுங்கத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் வியட்நாமில் இருந்து வந்த ஒரு பயணியிடம் இருந்து RM1,000 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சரியான இறக்குமதி அனுமதி இல்லாததால் அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 இன் பிரிவு 11(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

நமக்குத் தெரியும், எலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொற்று நோய்களை ஏற்படுத்தும். விலங்கு நோய்க் கட்டுப்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்,என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு, நோய்க் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் விவசாயத் துறையை அச்சுறுத்தும் பூச்சிகள் நுழைவதற்கான ஆபத்து உள்ளிட்ட விவகாரங்களில் எல்லையில் உள்ள அமலாக்க அமைப்புகளுடன் MAQIS எப்போதும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here