கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 12 :
உலு கிளாங் மாநிலத் தொகுதிக்கான பெரிகாத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று காலை 8.50 மணிக்கு சுங்கை கிளாங் வாக்களிப்பு மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
நீல நிற சட்டை அணிந்திருந்த அஸ்மினுடன் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ஷம்ஷிதா தஹாரினும் வந்திருந்தார்.
குறித்த தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது முன்னாள் தோழர் ஜுவைரியா சுல்கிப்லியுடன் அவர் நேருக்கு நேர் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








