பட்டர்வொர்த் துறைமுகத்தில் மூழ்கி வரும் அடையாள சின்னமான “Pulau Kapas” படகு

பட்டர்வொர்த் துறைமுகத்தில் அடையாள சின்னமாக விளங்கி வந்த பினாங்கு படகான “Pulau Kapas” செவ்வாய்கிழமை (ஜூலை 23) மூழ்கி வருகிறது. பினாங்கு துறைமுக ஆணையத்தின் (PPC) பொது மேலாளர் விஜயஇந்திரன் R. விஸ்வலிங்கம் கூறுகையில், படகை மீட்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 2018ஆம் ஆண்டு முதல் வார்ஃபில் நிறுத்தி வைக்கப்பட்டத்தில் இருந்து அதன் மேற்பகுதி சில காலமாக அழுகி, அரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

படகுகளை மீட்பதா அல்லது ஒட்டுமொத்தமாக அகற்றுவதா என்பது குறித்து ஆலோசிக்க புதன்கிழமை (ஜூலை 24) கூட்டம் நடைபெறும் என்று விஜயஇந்தியரன் கூறினார். அதிக விலை காரணமாக படகுகளை உணவகங்களாக மாற்றுவதற்கு எவரும் முன்வரவில்லை என்று அவர் மேலும் கூறினார். டிசம்பர் 31, 2020 அன்று அடையாள சின்னமான நான்கு படகுகளில் புலாவ் காபாஸ் ஒன்றாகும். மற்ற படகுகள் புலாவ் உந்தன், புலாவ் பாயா மற்றும் புலாவ் தலாங் தலாங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here