கோலாலம்பூர்:
சிங்கப்பூரிலிருந்து வரும் தன்னார்வல ஆங்கில ஆசிரியர்களால் மலேசியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தன்னார்வல ஆங்கில ஆசிரியர்களை வேலையில் அமர்த்துவதற்கான முழுச் செலவையும் சிங்கப்பூர் ஏற்கும் என்று கல்வி அமைச்சு எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இருநாட்டுப் பிரதமர்களும் சந்தித்தபோது, அதுகுறித்துப் பேசப்பட்டது என்று கூறிய கல்வி அமைச்சு, அந்த யோசனை தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
“நகர, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த உதவுவதுதான் அத்திட்டத்தின் இலக்கு. சாபா, சரவாக் பகுதிகளும் அதிலடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.















