சிறு, குறு, உணவு பான வர்த்தகர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விதியை அரசு மறுபரிசீலனை செய்யவுள்ளது

‎புத்ரஜெயா: மானிய விலையில் கிடைக்கும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை வர்த்தகர்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம்  வாழ்க்கைச் செலவு அமைச்சர் ஆர்மிசான் முகமது அலி தெரிவித்தார். இந்தத் திருத்தங்கள் குறு, சிறு அளவிலான உணவு, பான (F&B) வர்த்தகர்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் என்றும் ஒழுங்குமுறை தொடர்பான தெளிவை உறுதி செய்யும் என்றும் ஆர்மிசான் கூறினார்.

விநியோகக் கட்டுப்பாடு விதிமுறைகள் (திருத்தம்) 2021, அல்லது PPKB (திருத்தம்) 2021, தற்போது ஒரு நாளைக்கு 42 கிலோவுக்கு மேல் LPG பயன்படுத்தும் எந்தவொரு வணிகமும் திட்டமிடப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here