பூச்சோங். கம்போங் லெம்பா கின்ராராவில் உள்ள ஒரு காகிதத் தொழிற்சாலை இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து நாசமானது. பூச்சோங் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு மதியம் 12.15 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், ஜாலான் லெம்பா கின்ராராவில் உள்ள இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
சுமார் 100 சதுர அடிக்கு 120 சதுர அடி பரப்பளவு கொண்ட தொழிற்சாலை 80% சேதமடைந்துள்ளதாக அது கூறியது. மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கபப்டும் என்று அந்தத் துறை ஒரு அறிக்கையில் மேலும் கூறியது. முன்னதாக, தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறும் காட்சிகளை நெட்டிசன்கள் பகிர்ந்து கொண்டனர்.









