இயற்கை வளங்கள்,சுற்றுச்சுழல் அமைச்சராக ஜொஹாரி கனி நியமனம்

பெட்டாலிங் ஜெயா:

தற்போது தோட்ட, வர்த்தகப் பொருள் அமைச்சராக உள்ள டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.

அமைச்சரவைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த இரட்டை அமைச்சுப் பொறுப்பை ஜொஹாரி ஏற்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார்.

இந்த பதவி இதற்கு முன் நிக் நஸ்மி நிக் அஹ்மட்டால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவர் 2022 டிசம்பர் முதல் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சராகவும், பின்னர் 2023 டிசம்பர் முதல் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராகவும் இருந்தார்.

செத்தியா வாங்சா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் PKR துணைத் தலைவருமான நிக் நஸ்மி, கடந்த மே மாதம் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து அமைச்சரவை பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here