காதலன் ராஜ் நிடிமொருவை 2-வது திருமணம் செய்து கொண்டார் சமந்தா

கோயம்புத்தூர்:

பிரபல நடிகை சமந்தா இந்தி திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை இன்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடிகை சமந்தா, ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹா’ முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here