சென்னை, தலைமைச் செயலகத்தில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கு 459 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.










