துபாயில் 24 காரட் தங்கத்தில் நடைபாதை; விரைவில் திறப்பு…

துபாய் துபாயில் 24 காரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது துபாய். அங்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததால், உலகின் பல நாடுகளை விட துபாயில் தங்கம் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.இதனால் சுற்றுலா பயணியர் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதற்கு துபாயை தேடி செல்கின்றனர். இதற்காக துபாயின் தெய்ரா பகுதியில் தங்க விற்பனை மாவட்டம், இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000-த்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இங்கு இடம் பெற்றுள்ளனர்.

விரைவில் திறப்பு
இந்த தங்க நகர அந்தஸ்தை மேலும் மெருகூட்டும் வகையிலும், சுற்றுலா பயணியரை கவரும் நோக்கிலும் தங்க மாவட்டம் பிரமாண்டமான சாதனையை படைக்க தயாராகி வருகிறது. அதாவது அங்கு உலகின் மிக நீளமான, 24 காரட் தங்கத்திலான நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், இந்த நடைபாதை திறக்கப்பட உள்ளது.

உலக அளவில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி வருகிறது. இதனால், நம்மூரில் திருமணத்திற்கு நகை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், துபாயில் தங்கத்தில் நடைபாதை திறக்கப்பட இருப்பது உலக நாடுகளால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here