நியாயமான முறையில் பணத்தை சம்பாதிக்கவும் சம்பாதித்த பணத்தை நியாயமான வழிகளில் வீண்விரயம் இல்லாமல் செலவு செய்யவும் கடன் பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழவும் அடமானத்தில் நகைகளை திருப்பவும் நாம் கொடுத்த பணம் நம்மிடமே திரும்பி வரவும் அனுதினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து அனைத்து விதமான பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு உதவக்கூடிய மந்திரம்.
வாழ்க்கையில் பலவிதமான கட்டங்களில் பணத்தேவை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் பணத்தை தரக்கூடிய மகாலட்சுமி தாயாரை அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. பூஜைகள் கிடையாது. வழிபாடு கிடையாது. தினமும் பணம் வேண்டும் என்றால் தினமும் இந்த மந்திரத்தை நாம் கூற வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மட்டும் கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு குளித்திருக்க வேண்டும், அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது, சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. முழு மனதோடு ஆத்மார்த்தமாக அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து மகாலட்சுமி தாயாரை நினைத்து குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மட்டும் இந்த மந்திரத்தை கூறினால் போதும். அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம்.
அந்த மந்திரம் தான் மகாலட்சுமி தாயாரின் மந்திரமான “ஸ்ரீம் ஐஸ்வர்யம்”. இந்த மந்திரத்தை முழு மனதோடு நாம் கூற கூற நமக்கு மகாலட்சுமியின் அருளால் ஐஸ்வர்யம் பெருகும்.எளிமையான இந்த இரண்டு வார்த்தை மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்யும்.






















