மதவாத பேச்சுகள் அன்வாரை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு தந்திரம் என்று முன்னாள் MP

­அன்வார் இப்ராஹிமை பிரதமர் பதவியில் இருந்து   நீக்க வேண்டும் என்ற நோக்கில் மதவாத பேச்சுக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், இது “அரசியல் ஆதாயத்திற்கான தந்திரம்” என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரை இஸ்லாம் மற்றும் மலாய் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாதவர் என்று பொய்யான சாயம் பூசுவதற்காகவே இத்தகைய பேச்சுக்கள் உள்ளன என்று சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

தற்போதைய அரசாங்கம் சரியானது அல்ல, ஆனால் டத்தோஸ்ரீ அன்வார் ஒரு சிறந்த வழி (எதிர்க்கட்சியை விட). எனவே, பயத்தின் மூலம் நம்மைக் கையாளவும், கட்டுப்படுத்தவும் மற்றும் ஆதிக்கம் செலுத்தவும் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மலேசியர்களாக ஒன்றிணைவோம் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள்  இஸ்லாமியர்களை மத மாற்றம் செய்வதுபோல் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய கதைகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் சந்தியாகோ கூறினார்.

இத்தகைய மத மற்றும் இன உணர்வுகளை ஊக்குவிப்பவர்கள் நாட்டை அல்லது அதன் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் (வெறுமனே அதைச் செய்கிறார்கள்) அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக என்று கூறினார்.

நேற்று, அன்வார், சவாலாக உணர்ந்த சில “விரக்தியடைந்த” மக்கள், தங்களுக்கு சாதகமாக இன மற்றும் மத உணர்வுகளை தொடர்ந்து விளையாடுவார்கள் என்று கூறினார். பின்னர், போலீஸ் படைத்தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, இனவெறியை தூண்டும் அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Chegubard என்று அழைக்கப்படும் பதிவர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சக அமைப்பை கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்தும் முகநூல் பதிவின் மீது போலீஸ் விசாரணையை அடுத்து இந்த அறிக்கைகள் வந்துள்ளன.

வியாழனன்று, PAS நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் யூனுஸ் ஹைரி, “உணர்திறன்” காரணமாக மசூதிகளுக்கு அருகில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களை கட்ட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்த பரிந்துரையை சபா மற்றும் சரவாக் அரசியல் தலைவர்கள் உடனே நிராகரித்தனர். இது இஸ்லாத்தின் போதனைகளுக்கு இணங்கவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here