ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஹுசைனி இன்று உயிரிழந்தார்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஹுசைனி இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் (1986) படத்தில் அறிமுகமானவர் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரது உடல் தற்போது அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் வைக்கப்பட்டதாகவும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here