மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மூலம் ஜேபிஜே 1.13 மில்லியன் சம்மன்களை வெளியிட்டுள்ளது என ஜேபிஜே அமலாக்க பிரிவின் மூத்த இயக்குனர் முஹம்மது கிஃப்லி மா ஹசான் கூறினார்.
கடந்த ஆண்டு 848,885, இந்த ஆண்டு முழுவதும் 283,255 சம்மன்களை வழங்கப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு நடவடிக்கைகள் மூலம், உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம், காப்பீட்டுத் தொகை இல்லாதது என மூன்று முக்கிய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்காக, 301,774 சம்மன்க்ள் வழங்கப்பட்டுள்ளது.









