காமேனி கொல்லப்பட்டது எப்படி? தாக்குதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

 ஈரான் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.

வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.

இந்தநிலையில், ஈரான் உயர் தலைவர் காமேனி தெஹ்ரானில் நிலத்துக்கு அடியில் பதுங்கியிருந்த இடத்தை தகர்த்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்,

சிங்கத்தின் கர்ஜனை ஆபரேஷனில் 50 ஜெட் விமானங்கள் ஈடுபட்டன. காமேனியின் இல்லம், அலுவலகம் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் காட்சிகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here