ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அனைத்துலக வேத ஜோதிடக் கருத்தரங்கு

மலேசிய ஜோதிடக் கழகத்தின் (Malaysian Astrological Society, MAS) ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக நடைபெற்ற அனைத்துலக ஜோதிட கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர் என்று பொருளாளர் பவானி கூறினார்.  கடந்த 2011-ஆம் ஆண்டில் ஒரு ஜோதிட கருத்தரங்கு நடைபெற்றாலும், இ‌ம்முறை அனைத்துலக அளவில் வெளிநாட்டைச் சேர்ந்த சொற்பொழிவாளர்களான பேராசிரியர் கிரிஷ் முரளி ஈஸ்வர், வல்லரசு தினேஷ் இராஜா, இராமன் சுப்ரஜாராமன் ஆகிய 3 பேர் கலந்துகொண்டு மாநாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மூன்று பேச்சாளர்களும், இந்திய பாரம்பரிய ஜோதிடத்திலும் அதன் வழி உருவான பிற ஜோதிட வர்க்கங்களிலும் பிரசித்திபெற்ற ஜோதிடர்கள் மட்டுமல்லாது, ஆக்ககரமான ஆரய்சிகளை மேற்கொள்ளும் ஜோதிட ஆய்வாளர்களும், இவர்களது ஜோதிட ஆராய்ச்சிகளைப் அங்கீகரிக்கும் விதமாக, “ஜோதிட இரத்னா” எனும் விருது வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளாக, மலேசிய ஜோதிடக் கழகத்தின் தலைவராகச் சேவையாற்றி வரும் கவின் தயாளன், இம்மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியிருப்பதாக அறிவித்தார். இம்மாநட்டில் இந்தியர்களைத் தவிர்த்து வேத ஜோதிடத்தில் நாட்டமுள்ள பிற இனத்தவரும் கலந்து கொண்டதை மகிழ்வுடன் தெரிவித்தார். பலர் நேரிடியாக, தொலைவிலும் வெளிநாட்டிலும் இருப்பவர்களுக்கு இயங்கலை வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டை முன்னிறுத்தி, மலேசிய ஜோதிட கழகம், ஆஸ்ட்ரோலிஜிகல் பெர்ஸ்பெக்டிவ் எனும் ஆய்விதழ் வழியாக 14 மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என அவர் சொன்னார். மேலும், கவின் தயாளன் மாநாட்டுப் பணிக்கு அயராது உழைத்த செயற்குழு உறுப்பினர்ககளான துணைத்தலைவர் இராஜேஸ்வரன், பொருளாளர் பவானி, செயலாளர் ஸ்ரீ கணேஷ், உறுப்பினர்களான டாக்டர் இராஜேஷ் (நிகழ்சி நெறியாளர்), டாக்டர் பாஸ்கரன் (ஜோதிட ஆய்விதழுக்கான ஆசிரியர்) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சண்முகம் செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here