இன்று அதிகாலை பெர்லிஸ் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவருடன் இருந்த சக ஊழியர்கள் மூவர் காயமடைந்தனர். கங்காரில் உள்ள சுங்கை பாடாங் கடல் பகுதியில், எல்லை கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கையில் MMEA அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ‘பெரித்தா ஹாரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த அதிகாரிக்கு மனைவியும், 14 மற்றும் 11 வயதுடைய இரு குழந்தைகளும் உள்ளனர். கங்காரில் உள்ள துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு, அவரது உடல் இன்று கெடாவின் கோல நெராங்கில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயிலின் உதவியாளரைத் தொடர்பு கொண்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக MMEA விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தும் என்று தெரிவித்தார்.














