நீரிழிவு நோயாளிகளின் காயப் பராமரிப்பில் வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் கிளினிக் ஸ்டார் மெடிகேர்

நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ள ஜோகூர் பாருவைச் சேர்ந்த கிளினிக் ஸ்டார் மெடிகேர் நிறுவனம், மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெறும் பெருமையைப் பெற்றுள்ளது. நவீன காயப் பராமரிப்பு சிகிச்சை (Advanced Wound Care) மூலம் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளின் காயங்களைக் குணப்படுத்தியதற்காக இந்தச் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பலரையும் பாதித்து வரும் நிலையில், அந்நோயுடன் தொடர்புடைய காயங்கள் நோயாளிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக ஆறாத காயங்கள் உரிய சிகிச்சை பெறாவிட்டால் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய நோயாளிகளுக்கு நவீன மருத்துவத் தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட காயப் பராமரிப்புச் சிகிச்சையை வழங்கி, அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் கிளினிக் ஸ்டார் மெடிகேர் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்த மருத்துவச் சேவையை முன்னெடுத்து வரும் மூத்த நிரந்தர மருத்துவ அதிகாரியான டாக்டர் அரிவர்ணை கிருஷ்ணன் (Dr. Arivarni Krishnan), மலாக்கா மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் (MBBS) பெற்றவர். குடும்ப மருத்துவத் துறையிலும், நவீன காயப் பராமரிப்புச் சிகிச்சையிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். நோயாளிகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உரிய மருத்துவப் பராமரிப்பை வழங்குவதுடன், நீரிழிவு நோயாளிகளின் காயச் சிகிச்சையில் நவீன அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருவது இவரது மருத்துவச் சேவையின் முக்கிய அம்சமாகும். இந்தச் சாதனை டாக்டர் அரிவர்ணை கிருஷ்ணனின் மருத்துவப் பணிகளுக்கு மட்டுமன்றி, கிளினிக் ஸ்டார் மெடிகேர் நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைக் கொண்டாடும் வகையில், 2026 நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜோகூர் பாரு, ஜாலான் கெபுன் தேயில் அமைந்துள்ள கிளினிக் ஸ்டார் மெடிகேர் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகத் துறையினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சாதனையைச் சிறப்பித்தனர். மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் மறுவாழ்வுக்கான வாய்ப்பையும் வழங்குவதாகும். அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளின் காயப் பராமரிப்பில் கிளினிக் ஸ்டார் மெடிகேர் பதிவு செய்துள்ள இந்தச் சாதனை மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.  மேல் விவரங்களுக்கு [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here