வாடிகன் -போப் பிரான்சிஸுக்கு அறுவைச் சிகிச்சை

வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போப் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 84 வயது போப் பிரான்சிஸுக்கு பெருங்குடல் குறுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதற்காக ரோம் நகரிலுள்ள ஜெமிலி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புனித பீட்டா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அங்கு வந்திருந்தவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here