மலேசியா Merck Sharp & Dohme (MSD) உடன் கோவிட் -19 சிகிச்சைக்காக வைரஸ் தடுப்பு மருந்தான Molnupiravir வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக Molnupiravir 150,000 மாத்திரைகளை வாங்குவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 7) கையெழுத்திட்டதாகக் கூறினார்.
இந்த முடிவு மலேசியாவின் தொற்றுநோய் நிலை மற்றும் கோவிட் -19 வைரஸுடன் வாழ்வதற்கு தயாராகும் வகையில் எடுக்கப்பட்டது. இது தடுப்பூசிகள் மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகள் தவிர, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மற்றொரு வழி Molnupiravir என்று கைரி கூறினார்.






















