அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி முதலில் இந்த 4 மாகாணங்களுக்குத் தானாம்!

கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். கொரோனா பரவல் தொடங்கியது முதலே அங்கு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன், சற்று குறைந்திருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் இரு மடங்காக அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 1,69,95,711 பேரும், இந்தியாவில் 89,12,907 பேரும், பிரேசில் நாட்டில் 59,11,758 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் மட்டுமே 1,57,261 பேர் அதிகரித்துள்ளனர். அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது. அமெரிக்காவில் நேற்று இறந்தோர் எண்ணிக்கை 1,615. மரணங்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம்.

கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கும் நாடு அமெரிக்காதான். அங்கே ஃபைசர் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சென்ற மாதம் ஃபைசல் கம்பெனியின் சிஇஒ ஆல்பர்ட் போர்லா, “எங்கள் ஆய்வில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து, அமெரிக்க அரசு எங்கள் கண்டுபிடிக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த வருடம் டிசம்பருக்குள் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பிருக்கிறது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

அதன் முதல்படியாக அமெரிக்காவின் 4 மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவுசெய்துள்ளது ஃபைசர் நிறுவனம். அதன்படி டெக்ஸாஸ், டென்னிஸி, ரோட் தீவு, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களில் முதல் கொரோனா தடுப்பூசியைச் செயல்படுத்தி அங்கு கிடைக்கும் மாற்றங்களை வைத்து அதை விரிவு செய்யப்படும் என்று ஃபைசர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Dailyhunt