மகா சிவராத்திரியில் கோவிலுக்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள்

சிவபெருமானுக்கு உரிய மிகவும் விசேஷகரமான நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜை என்பது இரவு முழுவதும் நடைபெறும். அதில் பலரும் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள்.

 

கோவிலுக்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள். எந்த ஒரு தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் பலவிதமான பொருட்களை வாங்கி தரும் பழக்கத்தை நாம் வைத்திருப்போம்.
அப்படி வாங்கித் தருவதன் மூலம் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலனையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் சிவபெருமானுக்கு நாம் அபிஷேகத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் பல விதமான பொருட்களை வாங்கி தருவோம். அப்படி வாங்கித் தருவதன் மூலம் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை பார்ப்போம்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக வாங்கி தரக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் நம்முடைய ஆன்மா தூய்மை அடையும் என்று கூறப்படுகிறது. அதாவது அபிஷேகத்திற்காக பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம்,  இளநீர், தேன் போன்ற எதை நாம்  அபிஷேகத்திற்காக வாங்கி கொடுத்தோம் என்றால் நம்முடைய ஆன்மா தூய்மை அடையும் என்று கூறப்படுகிறது.
அதே போல் சிவபெருமானுக்கு அலங்காரத்திற்காக விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் வாங்கி தருவதன் மூலம் நமக்கு நல்ல குணமும் பண்பும் வளரும் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு கண்டிப்பான முறையில் நெய்வேத்தியம் என்பதை செய்வார்கள். அந்த நெய்வேத்தியத்திற்கு தேவையான பொருட்களை நாம் வாங்கிக் கொடுத்தாலோ அல்லது நெய்வேத்தியம் வைப்பதற்குரிய பிரசாதத்தை செய்து கொடுத்தாலோ நம்மளுடைய ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மேலும் நாம் எதை விரும்புகிறோமோ அது நமக்கு கிடைக்கும்.
சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வறுமை நீங்கும். செல்வ கடாட்சம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தீபம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் தங்களால் இயன்ற எத்தனை  தீபங்களை வேண்டுமானாலும் ஏற்றலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானுக்கு சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இதை வாங்கி தருவதன் மூலம் அறிவு வளம் அதிகரிக்கும், ஞானம் பெருகும், படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தங்களால் இயன்ற எண்ணிக்கையில் தாம்பூலத்தை தானமாக தருவதன் மூலம் இந்த உலகில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இன்பங்களையும் பெற்று திருப்திகரமான வாழ்க்கையை வாழ முடியும்.
இவை அனைத்தையும் வாங்கித் தர வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. நம்முடைய தேவைகள் என்னவோ? நமக்கு எது வேண்டுமோ? அதற்கேற்றார் போல் பொருட்களை நம்மால்  இயன்ற அளவு முழுமனதோடு வாங்கி தருவதன் மூலம் நாம் நினைத்தது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here