
கோலாலம்பூர்
அமெரிக்க ஜன தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடென், ஆசியானுக்கு அதிக கவனம் செலுத்துவார் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஸ்தபா முகமது மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.
ஜோ பிடன் வெற்றியை பொதுவாக உலகம் முழுவதும் வரவேற்கப்படுகிறது. தனது முன்னோடியான் டொனால்ட் டிரம்ப் இப்பகுதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது பொதுவான் குறைபாடாகும். இதைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக, ஆசியாவில் நாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம், ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக ஆசியான் மீது அதிக கவனம் செலுத்தவில்லை.
இன்றுவரை மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும் அமெரிக்கா விளங்கி வருகிறது. எப்படியிருந்தாலும், இது ஒரு சக்திவாய்ந்த நாடு என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மலேசியா , பிற நாடுகளிலிருந்து வரும் பொருட்களின் மீது கட்டுப்பாடுகள் இல்லாமல் உலக வர்த்தகத்தை உயர்த்த பிடன் முயற்சிப்பார் என்ர நம்பிக்கை வலுவாக இருக்கிறது.
பொருளாதாரம், வர்த்தகம், அரசியல் ஆகிய பதட்டங்கள் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம். மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.