சூடானில் மேலும் 3 மலேசியர்கள் சிக்கியுள்ளனர் – ஜாம்ப்ரி

சூடான் கார்ட்டூமில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யாத மேலும் மூன்று மலேசியர்கள் இன்னும் சூடானில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கார்ட்டூமில் உள்ள மலேசியத் தூதரகத்தின் Facebook Messenger சமூக பயன்பாட்டின் மூலம் ஏப்ரல் 30 அன்று தான் குறித்த மூவரைப் பற்றிய தகவல் கிடைத்தது என்று விஸ்மா புத்ரா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதில் அல் காசா பிராந்தியத்தில் வசிக்கும் தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு தாய் மற்றும் அவரது சூடான் கணவரை உள்ளடக்கியது, ஆனால் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், குடும்ப உறுப்பினர்களை சூடானில் இருந்து மாற்றுவதற்கான முயற்சியை விஸ்மா புத்ராவின் சூடான் ஸ்பெஷல் ஆப்ஸ் குழு மேற்கொண்டு வருகிறது.

உண்மையில், இந்த நேரத்தில் மூன்று மலேசியர்களும் கணவரான சூடானியரும் போர்ட் சூடானுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள், என்றும் சீக்கிரம் மலேசியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜாம்ப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here