மூதாட்டியைக் காப்பாற்ற வந்த இடத்தில் அவரிடமுள்ள பென்சன் பணத்தைத் திருடிய அதிகாரிக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜாக்கி ஒய்ட்(83). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் சமூக சேவை ஆற்றியதற்கான இங்கிலாந்து நாட்டு ராணியிடம் இருந்து விருது பெற்று சில காலம் கழித்து பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் வீட்டில் தவறிக் கீழே விழுந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆடம் புரூக்ஸ் (33) இளைஞர்
ஆம்புலன்ஸில் ஒய்ட்டை ஏற்றியுள்ளார். பின்னர் ஒய்ட்டின் வீட்டில் உள்ள நகை, பணப்பெட்டிகளில் தேடி அதில் இருந்த அவரது பணத்தை எடுத்துள்ளார்.
பின்னர் சிசிடிவி கேமரா அங்கிருந்ததால் அதை எடுத்துக்கொண்டு புரூக்ஸ் சென்றுள்ளார். அந்த மூதாட்டி சில மணிநேரங்களில் உயிரிழந்துவிட்டார். அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தததில் ஆடம் புரூக்ஸ் திருடியது தெரியவந்தது.
ஒருவர் உயிருக்குப் போராடும்போது அவரைக் காப்பாற்றாமல் திருடிய குற்றதத்துக்காக, அவருக்கு நீதிமன்றம் 27 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.