‘அதுதான் பிரபலம்’ – கிருத்திகா உதயநிதி பதிவு வைரல்

சென்னை,தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அந்த பதிவில், “நீங்களும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதும் சேர்ந்துதான் பிரபலம் என்ற அந்தஸ்தை கொடுக்கிறது. ஆனால் எப்போது நீங்கள், “மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான்’’ என நினைக்க தொடங்கி, உங்கள் சுயத்தை கைவிடுகிறீர்களோ, அப்போது நீங்கள் பெரும் பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் படி உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தனது பதிவில் கிருத்திகா உதயநிதி எந்த நபரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here