கோலாலம்பூர்,ஏப் 5-
முழு அளவிலான ஊரடங்கிற்கு மலேசியா மாறப்போவதாக மலேசியா முழுவதும் தகவல் பரவி வருகிறது.
மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் தேசிய பாதுகாப்பு மன்றத்தை கோடி காட்டி செய்திகள் கசிந்து வருகின்றன.
முழு ஊரடங்கின்போது சந்தைகள் மூடப்பட்டு விடும். மளிகைக் கடைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள் என அனைத்துமே செயல்படாது.
ராணுவத்தின் உதவியுடன் காவல் துறை மட்டுமே செயல்படும்.
மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ராணுவ கண்காணிப்பில் நிகழ்த்தப்படவிருக்கும் இந்த ஊரடங்கு கடுமையானதாகவும் மக்கள் நலன் சார்ந்த கண்டிப்புடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வாட்ஸப்பில் தேசிய மொழியில் வெளியிடப்பட்டுள்ள மூன்று ஒலி வெளியீடுகளும் முழு ஊரடங்கு குறித்த கவனத்தை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.