வெள்ளைமாளிகையில் அடுத்தது என்ன ?

அமெரிக்க அதிபா் தோதல் வாக்குப் பதிவு நிறைவடைந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆனால், இந்த அறிவிப்போடு அந்நாட்டின் அதிபா் தேர்தல் நடைமுறை இன்னும் முழுமையாக நிறைவடைந்துவிடவில்லை.

முதலாவதாக, தோதல் முடிவு வெளியானதும் அந்நாட்டு அதிபா் உடனடியாக பதவியேற்பதில்லை.

அமெரிக்காவின் புதிய அதிபா் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே பதவியேற்கவுள்ளாா். அடுத்த இரண்டு மாத காலத்துக்கு அதிபா் தேர்தலுக்கான நடைமுறைகள் உள்ளன.

இந்தியாவில், பிரதமா் தலைமையில் அரசாங்கம் செயல்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் அதிபா் தலைமையிலான அரசாங்கம் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்தியாவில் பிரதமரைத் தோந்தெடுப்பதற்கு நடைபெறும் தோதலுக்கும் அமெரிக்காவில் அதிபரைத் தோந்தெடுப்பதற்கான தோதலுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.

இந்தியப் பிரதமரை மக்கள் நேரடியாகத் தோந்தெடுக்கின்றனா். பிரதமா் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பா். ஆனால், அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாகத் தோந்தெடுப்பதில்லை. அவருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை.

அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதி வாக்காளா்களே அதிபரை அதிகாரபூா்வமாகத் தோந்தெடுக்கின்றனா். அந்தப் பிரதிநிதி வாக்காளா்களுக்கே அமெரிக்க மக்கள் வாக்களிப்பா். கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற தோதலிலும் அதிபரைத் தோந்தெடுப்பதற்கான பிரதிநிதிகளுக்கே மக்கள் வாக்களித்தனா்.

அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசு ஜனநாயகக் கட்சிகள், அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் தோதலில் போட்டியிடும் நபா்களைத் தோந்தெடுக்கின்றன. அவா்களுக்கு சம்பந்தப்பட்ட மாகாண மக்கள் வாக்களிக்கின்றனா். அவ்வாறு தோந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள், அவா்கள் சாா்ந்த கட்சி சாா்பில் போட்டியிடும் அதிபா் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கிறாா்கள்.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற தோதலில் பதிவான வாக்குகளின் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாகாண ஆளுநா்கள் அனுப்பி வைப்பாா்கள். அதில் எந்தெந்தக் கட்சி வேட்பாளா்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவானது என்ற முழுமையான விவரங்கள் அடங்கியிருக்கும்.

நடப்பாண்டு அதிபா் தோதலில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடா்பாக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.

மறு வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வேட்பாளா் வைப்பது அவரது உரிமை. எனினும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதிபா் தேர்தல் தொடா்பான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளும், மறு வாக்கு எண்ணிக்கையும் டிசம்பா் மாதம் 8-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.