உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

லகில் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் ஒருவராக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பட்டியலிடப்பட்டுள்ளார்.

“The Muslim 500: The World’s 500 Most Influential Muslims 2024” இன் சமீபத்திய பதிப்பில், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார், முதல் 50 செல்வாக்குமிக்க தலைவர்களில் 17வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இதே பிரிவில் அன்வார் 22வது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 13 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த வெளியீட்டின் படி, தரவரிசை தேர்வு கலாச்சாரம், சிந்தனை, நிதி மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

இஸ்லாமிய அறிஞரும், அனைத்துலக இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிறுவனத்தின் நிறுவனருமான டான்ஸ்ரீ சையத் முஹமட் நகிப் அல்-அத்தாஸ் 2024ஆம் ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here