ஹனோய்,
கடந்த வியாழக்கிழமை நொய் பாய் விமான நிலையத்தில் ‘பிளாஸ்டிக்’ பையில் சுற்றப்பட்டிருந்த 55 காண்டா மிருகங்களின் கொம்புகளை வியட்நாமிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுமார் 125 கிலோ கிராம் எடை கொண்ட அந்தக் கொம்புகள் சந்தேகிக்கும் வகையில் இருந்ததாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
அந்தப் பொட்டலங்கள் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்ததாக விமான நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.வனவிலங்கு கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்தனர். அந்த காண்டா மிருகக் கொம்புகளின் விலை ஒரு கிலோ கிராமிற்கு 60,000 அமெரிக்க டாலர் (வெ.47,140) வரை விற்கப்படுவதாகத் தெரிகிறது.