கோலாலம்பூர், ஆகஸ்ட் “Khat ” எனும் ஜாவி எழுத்து ஓவியம் மற்றும் ஸாக்கிர் நாய்க்கிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் போன்ற விவகாரங்களில் பிரதமர் எடுத்திருக்கும் முடிவுகள் அளவுக்கு அதிகமான அதிகாரம் பிரதமர் கையில் உள்ளதை காட்டுவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறியுள்ளார்.
இதை தடுப்பதற்கு ,முடிவெடுக்கும் நடைமுறைகளை பக்காதாட் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
இனம் மற்றும் சமய தொடர்பான விவகாரங்கள் இந்த மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு முடிவெடுப்பது சிறப்பு. அதே சமயத்தில், முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடமே மையம் இட்டிருக்காமல் Pakatan Harapan கூட்டு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ பரிந்துரைத்துள்ளார்.
இல்லாவிட்டால் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வெளியேற்ற முடியாமல் போனது போல் நிலைமை ஆகிவிடும் என அவர் எச்சரித்தார்