கோலாலம்பூர், ஆகஸ்ட் – தமிழ்ப்பள்ளிகளில் Khat எனும் ஜாவி எழுத்து ஓவியத்தை கற்றுக்கொடுப்பது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல, அதே வேளையில் தேவையற்றது என தாம் கூறியதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல என பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தாம் அவ்வாறான ஒரு கருத்தை, அச்செய்தியை வெளியிட்ட மின் ஊடக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை. அச்செய்தி தவறானது என வேதமூர்த்தி கூறியுள்ளார்.
ஜாவி எழுத்து ஓவியத்தை சொல்லி கொடுப்பதை விட மாணவர்களுக்கு திறன் பயிற்சியை கற்று கொடுத்து வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையைத் தீர்க்க வழி காண வேண்டும் என அவர் கூறியதாக செய்தி ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.