நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீஸாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் பறிமுதல் – அமெரிக்கா முனைப்பு

கோலாலம்பூர், நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகன் ரீஸா அஸிஸுக்குச் சொந்தமான அமெரிக்காவில் உள்ள சொகுசு வீடுகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வீடுகள் 1எம்டிபி நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்நிறுவனத்திலிருந்து 1,887 கோடி ரிங்கிட் களவாடப்பட்டதாக மலேசியாவும் அமெரிக்காவும் சந்தேகிக்கின்றன.

1எம்டிபியின் 170 கோடி அமெரிக்க டாலர் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை 2016இல் இருந்து முயன்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 200 மில்லியன் டாலரை மலேசியாவிடம் திரும்பத் தரப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படவிருக்கும் சொத்துகளில் லண்டனில் இருக்கும் 27.97 மில்லியன் டாலர் பெறுமான வீடு, அமெரிக்கா பீவர்லி ஹில்சில் உள்ள 17.5 மில்லியன் டாலர் பெறுமான வீடு மற்றும் நீயூ யார்க்கில் உள்ள 35.5 மில்லியன் பெறுமான அடுக்குமாடி வீடு முதலியவை அடங்கும்.

ரிஸா அந்த வீடுகளை ஜோ லோவிடமிருந்து வாங்கியதாக நம்பப்படுகிறது. கடந்த மாதம் 24.8 கோடி டாலர் 1எம்டிபி பணத்தைக் களவாடியதாக ரிஸா அஸிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ரிஸா அஸிஸ் ரெட் கிரைனைட் எனும் பட நிறுவனத்தின் மூலம் ஹாலிவுட்டில் சினிமா படம் தயாரித்துள்ளார். அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதைத் தவிர்க்க, ரிஸாவின் நிறுவனம் 60 மில்லியன் டாலர் அபராதத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here