பெங்களூரு
இந்தியா, பெங்களூரு பெண்ணான ஐஸ்வர்யா பிஸ்ஸே ஹங்கேரியில் நடந்த எஃப் ஐஎம் உலகக் கிண்ண மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்று, முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.
அனைத்துலக மோட்டார் சைக்கிள் சம்மேளனத்தினால் அந்தப் போட்டி ஹங்கேரி வர்பலொதா எனும் இடத்தில் நடத்தப்பட்டது.
தூபாயில் நடந்த அதன் பூர்வாங்கப் போட்டியில் ஐஸ்வர்யா முதலாவதாகவும் போர்ச்சுக்கலில் மூன்றாவதாகவும் ஸ்பெயினில் ஐந்தாவதாகவும் ஹங்கேரியில் நான்காவதாகவும் வந்து மொத்தமாக 65 புள்ளிகளைப் பெற்று மொத்த வெற்றியாளராகத் தேர்வு பெற்றார்.
ஹங்கேரியில் நடந்த இறுதிக் கட்டப் போட்டியில், ஐஸ்வர்யா 52 புள்ளிகளையும் வியரா 45 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம் உலக அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணாக ஐஸ்வர்யா திகழ்கிறார்