ரணிலின் ஒத்துழைப்போடு களமிறங்கும் சஜித்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் எவரும் கவலையடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,பலாங்கொடையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியாள் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியில் வாய்ப்பு இல்லை.

2010ஆம் 2015ஆம் ஆண்டுகளில் கட்சியின் முட்டாள் தனமான தீர்மானங்களினால் தோல்வியை நாங்களே ஏற்படுத்திக் கொண்டோம்.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உயிர்த்தியாகம் செய்தாவது எங்களின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here