ஷா ஆலம்
எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்தினை அறிவிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையர் லத்தீபா கோயா அறிவித்தார்.
சொத்து அறிவிப்பில், உறுப்பினர்களின் வருமானம், வேறு வகையான வருமானங்கள், குடும்ப சொத்து, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெற்ற சொத்துகள் யாவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அதே வேளையில், எம்பிக்கள் பெற்றிருக்கும் கடனும் பட்டியலிடப் பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் அது பற்றிய ஆவணங்களைத் திறப்பதற்கு முன்னரே அதனைச் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.