நஜிப்பின் தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்த ஆடவன் 1 வாரம் சிறை

கோலாலம்பூர்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தாயார் ரஹா மொஹமட் நோவாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 21 வயது வேலையற்ற ஆடவன்  ஒருவனுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  ஒரு வாரம் சிறைத்தண்டனையும், ரிம 1,500 அபராதமும் விதித்துள்ளது.

முகமட் நூர் அக்மால் அசிஷம், கடந்த ஆகஸ்ட் 15 தேதி, கோலாலம்பூர் ஜாலான் இகதோனிலுள்ள ரஹாவின் வீட்டுனுள் புகுந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 15 ம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அபராதம் செலுத்தத் தவறினால் முஹம்மது நூர் அக்மல் மேலும் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here