பெட்டாலிங் ஜெயா
அமெரிக்க விமானத்தில் கழிவறையில் புகைப்படக் கருவியை மறைத்து வைத்துப் படம் எடுத்த மலேசியருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஹியூஸ்டன் நீதிபதி, சூன் பிங் லீ(வயது 50) என்பவருக்கு இரண்டு மாத சிறையும் 6,000 டாலர்(ரிம. 25,270) அபராதத்தையும் விதித்தார். தண்டனை முடிந்ததும் லீ, மலேசியாவுக்கு அனுப்பப்படுவார்.
லீ அந்தல் காமிராவை சான் டியாகோவிலிருந்து ஹியூஸ்டனுக்குச் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பொருத்தியது சிசிவியின் பதிவில் காணப்பட்டது.
அவர் ஆகஸ்டு 7 இல் கைது செய்யப்பட்டார். கழிவறைக்குச் சென்ற மாது ஒருவர் அந்தக் காமிராவைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். லீ விமானத்திலிருந்து வெளியேறும்போது போலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.