சைட் சாடிக் மீது 10 மில்லியன் ரிங்கிட் வழக்கு.

புத்ராஜெயா

காட் எழுத்துக் கல்வி அமலுக்கு வந்தால் தங்களது பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறியதாக வெளிவந்த செய்தி தொடர்பில் அது முட்டாள்தனமான ஆணவம் எனச் சாடிய விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் மீது 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கப்போவதாக Sekat இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைட் சாடிக் அவ்வாறு கூறியதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கோரி 48 மணிநேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் அதற்கு சைட் சாடிக் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அதிருப்தி அடைந்த இந்த அமைப்பு இன்று புத்ராஜெயாவில் உள்ள அமைச்சர் சைட் சாடிக்கின் அலுவலகத்திற்குச் சென்று 14 நாட்களில் மன்னிப்பு கடிதம் அமைச்சரிடமிருந்து வரவேண்டும் இல்லையேல் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கப்படும் என நோட்டிஸ் வழங்கியுள்ளனர்.
இந்நோட்டிஸை அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் பெற்றுக் கொண்டார்.

சைட் சாடிக்கின் கருத்து இந்தியர்களிடயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here