பாகோ
இரு மலாய் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் தங்களின் யூ.பி.எஸ்.ஆர். தேர்வினை எழுதினர். ஜொகூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புத்ரா பாரிஸ் ஷா அப்துல்லாவும் நுருல் அட்ரியேனா ஷாஃபிகாவும் ஆறாம் ஆண்டு பயில்கின்றனர்.
அவர்கள் இருவரும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தமிழ்மொழி கருத்துணர்தலும் கட்டுரையும் தேர்வு பாடமாக எடுக்கின்றனர்.
அப்பள்ளியின் தலைமையாசிரியர், திரு.ஆர். செல்வம் கூறுகையில் இரு மலாய் மாணவர்களுடன் சேர்ந்து மொத்தமாக நான்கு மாணவர்கள் இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுதுகின்றனர்.
மொத்தம் 10 மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர் முதல் நாளன்று தேர்வு சீராக நடைப்பெற்றது என்றும் இவ்வாண்டும் 100 விழுக்காடு தேர்ச்சியினைப் பெற முடியும் என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிபடுத்தினார்.