நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

நாகை – நாகை மாவட்டம் திருநகரியில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களை பதிப்பதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் குழாய் பதிக்கும் உடனே தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக பல இடங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் திருநகரியில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here