பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலமாவதை அடுத்து தனது வீட்டில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய நீக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோத்தபாவின் வீட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது வீட்டினுள் நடக்கும் சம்பவங்கள் இணையத்தில் வெளியாகுவது கோத்தபாய ராஜபக்சவுக்கு பாரிய பிரச்சினையாகியுள்ளது.
எப்படியிருப்பினும் கோத்தபாயவின் இந்த செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்த மஹிந்த ராஜபக்ச, வீட்டுக்குள்ளே இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் எப்படி தேர்தல் வெற்றி பெறுவதென கோத்தபாயவிடம் கேட்டுள்ளார்.
முதலில் வீட்டில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும். இங்குள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இவ்வாறு நடக்க அனுமதிக்க கூடாது. வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உட்பட அனைவரையும் நீக்கி விட்டதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.