சவுதி – எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்த டிரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.
சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்கள் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் எண்ணெய் விலை அதிகரிப்பே.
இத்தாக்குதலை ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி குழு நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால், டிரோன்கள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் தெஹ்ரான் அதை மறுத்தது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரானால் நடத்தப்பட்டது என்று அரபு கூட்டணி செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறினார்.
மேலும், தாக்குதல் ஏமனில் இருந்த நடத்தப்படவில்லை, அவ்வாறு தோன்ற ஈரான் சிறந்த முயற்சிகள் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து 25 ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் எண்ணெய் நிலையங்களை தாக்கின.தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் ஹவுத்தி போராளிகளால் பயன்படுத்தப்படும் டிரோன்களின் எல்லைகளை தாண்டி வந்துள்ளது.
இந்த தாக்குதல் வடக்கிலிருந்து நடத்தப்பட்டுள்ளது என உறுதியாகியுள்ளது, டிரோன்கள் ஏவப்பட்ட சரியான இடத்தை அறிய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அல்-மாலிகி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் பேசிய அவர், Abqaiq மீதான தாக்குதலை உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என கூறினார். Abqaiq மற்றும் Hijrat Khurais எண்ணெய் நிலையங்களில் நடந்த தாக்குதல்கள் மே 14 அன்று நடந்த Afif மற்றும் Dawadmi மீதான தாக்குதல்களின் தொடர்ச்சி என்று கூறினார்.
மேலும்,ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தாக்குதலுக்கு பயன்படுத்திப்பட்ட ஆயுதங்களின் எஞ்சிய பொருட்களை ஊடங்களுக்கு அல்-மாலிகி காட்டினார்.