புதுடெல்லி – ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, ‘ 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்-ஆக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாகவே ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ரூ.2.024 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் ஏ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகிரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செயயப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, எலக்ட்ரோனிக் சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டுகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இ-சிகரெட்கள் தடைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்கர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.