தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.
இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இடையில் மாறிவிட மாட்டார்கள். அது மாதிரி கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள். ஆனாலும் கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஓர் அனுபவத்தையும் பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.
இதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார் என்று சுருதிஹாசன் கூறினார்.