பீஜியைத் தாக்குகிறது பலத்த சூறாவளி!

சுவா –

பசிபிக் பெருங்கடல் தீவான பீஜியை பலத்த சூறாவளி தாக்கி வருகிறது. அத்தீவை மூன்று வாரங்களுக்குள் தாக்கும் இரண்டாவது சுழல்காற்று இதுவாகும்.

சைக்கிளோன் டீனோ எனும் அச்சுழல்காற்று நேற்று வெள்ளிக்கிழமை தாக்கத் தொடங்கியது. அதனையடுத்து பெய்த கனத்த மழையினால் ஆறுகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் ஏறி வருகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக துயர்துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. பீஜியின் இரண்டாவது பெரிய தீவான வானுவா லேவுவில் மணிக்கு நூற்று முப்பது கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி தாக்கி வருகிறது.

தாழ்வான பகுதிகளிலும் கரையோரப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சூறாவளி தாக்கத் தொடங்குவதற்கு முன்பே பீஜியின் இதர தீவுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுப் பயணிகள் அவசர அவசரமாக தலைநகர் சுவாவை வந்தடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here