கோலாலம்பூர், மார்ச் 10-
மலேசிய சாலைகளில் வாரத்திற்கு குறைந்த பட்சம் நூறு பேராவது பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
பெருநாள் காலங்களில் வாரத்திற்கு நூறு பேராவது பலியாகி விடுகிறார்கள். இதர நாட்களில் அதன் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும் போதுமான சாலை வசதிகளைக் கொண்ட மலேசியா போன்ற நாட்டில் விபத்துகள் அதிகமாக நேர்வதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சாலை போக்குவரத்து இலாகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளது.
அண்மையில் முடிந்த சீனப் பெருநாள் காலகட்டத்தில் நூறு பேர் வரை சாலை தொடர்பான விபத்துகளில் ஒரே வாரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
பெருநாள் காலங்களில் வாகனமோட்டிகள் வீடு சென்று சேர்வதற்கு காட்டும் அவசரப் போக்கே சாலை விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது எனவும் சாலை போக்குவரத்து இலாகா அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும் மலேசியாவிலேயே சாலை விபத்துகள் அதிகமாக நேர்கின்றன என்கிற செய்தியும் கவலையளிப்பதாக உள்ளது.