புத்ரா ஜெயா, மார்ச் 11-
புத்ரா ஜெயாவிலுள்ள மலேசியத் தகவல் பல்லூடக ஆணையத்தின் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தாக்குதல் ஏற்பட்டிருப்பது ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார்.
தனது கணவரிடமிருந்து இவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. சைபர் ஜெயாவில் உள்ள தகவல் பல்லூடக ஆணையம் மற்றும் நாடு முழுவதுமுள்ள அதன் கிளை அலுவலகங்கள் எப்போதும் போலவே இயங்கி வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.