கோலாலம்பூர்:
சேவை என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது மலேசிய இந்து சங்கம். அந்த வகையில் கூட்டரசு பிரதேச இந்து சங்கத்தின் 38ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 5.4.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பெட்டாலிங் எஸ்டேட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம் கதிரேசன் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேசத்தின் இந்த 38ஆம் ஆண்டு பொதுகூட்டத்திற்கு தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தலைமை ஏற்று கூட்டத்தை வழி நடத்தி வைப்பார். மாநில வட்டாரத் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து இக்கூட்டத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார் மாநில தலைவர்.